பொன்முடி ஜாமின் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு
பொன்முடி ஜாமின் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு
பொன்முடி ஜாமின் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு
ADDED : செப் 20, 2011 10:49 PM

சென்னை: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஜாமின் மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
விழுப்புரம், பெரியார் நகர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினருக்குச் சொந்தமான, 61 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை, தனது சிகா கல்வி அறக்கட்டளைக்கு மிரட்டி வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கூட்டுறவு சங்க செயலர் சாந்தி கைது செய்யப்பட்டனர். ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்களை, விழுப்புரம் முதன்மை மாவட்ட கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் கோரி ஐகோர்ட்டில் பொன்முடி மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். பொன்முடி சார்பில் வழக்கறிஞர் என்.ஜோதி, அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜாமின் மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி சுதந்திரம் தள்ளிவைத்தார்.


