/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இருவழிச்சாலையாக மாறுமா காரியாபட்டி, நரிக்குடி ரோடுஇருவழிச்சாலையாக மாறுமா காரியாபட்டி, நரிக்குடி ரோடு
இருவழிச்சாலையாக மாறுமா காரியாபட்டி, நரிக்குடி ரோடு
இருவழிச்சாலையாக மாறுமா காரியாபட்டி, நரிக்குடி ரோடு
இருவழிச்சாலையாக மாறுமா காரியாபட்டி, நரிக்குடி ரோடு
ADDED : செப் 06, 2011 11:40 PM
காரியாபட்டி : மூன்று மாவட்டங்களை இணைக்கும் காரியாபட்டி.
நரிக்குடி ரோட்டை இருவழி சாலையாக மாற்றவேண்டும்.மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியாக திருச்சுழி உள்ளது. கடந்த 20 ஆண்டுளாக மழை குறைந்து, பிழைப்புக்காக மதுரை, கோவை, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். காரியாபட்டியிலிருந்து முடுக்கன்குளம், மறைக்குளம், பனைக்குடி வழியாக நரிக்குடிக்கு 35 கி.மீ., தூரம் உள்ளது. மழை நேரத்தில் ரோட்டை விட்டு வாகனங்களை கீழே இறக்கினால், விபத்து அபாயம் உள்ளது. காரியாபட்டி- நரிக்குடி வழியாக சென்றால் மூன்று மாவட்டங்களை இணைக்கும். ராமநாதபுரம் பார்த்திபனூர், பரமக்குடி, ராமேஸ்வரம், சிவகங்கை மானாமதுரை, திருப்புவனத்துக்கு எளிதில் செல்ல முடியும்.தற்போது ரோடு மோசமாக இருப்பதால் மதுரை வழியாக 25 கி.மீ., திருச்சுழி வழியாக 15 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. காரியாபட்டி-நரிக்குடி ரோட்டை இருவழிச்சாலையாக மாற்றினால், பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவதோடு, தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.