ADDED : செப் 21, 2011 09:51 PM
விழுப்புரம்:விழுப்புரம் அரிமா அரிவையர் சங்கம் சார்பில் நல்லாசிரியர்
விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம்
கீழ்பெரும்பாக்கம் அரசு சிறுவர் இல்லத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி மேலாளர்
கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.
அரிமா அரிவையர் சங்கத் தலைவர் நூர்ஜகான்
ரஷீத் முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்
மீராபாய், அறிவழகன் பாராட்டப்பட்டனர். நன்னடத்தை அலுவலர் நடராஜன், அரிமா
சங்க நிர்வாகிகள் துரை, திலிப், நடராஜன், மசிலின் பிளாரன்ஸ், அமுதமொழி,
ரஷீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.