தேர்வுக் கடிதங்கள் அனுப்புவதை தள்ளி வைத்தது தேர்வு வாரியம்
தேர்வுக் கடிதங்கள் அனுப்புவதை தள்ளி வைத்தது தேர்வு வாரியம்
தேர்வுக் கடிதங்கள் அனுப்புவதை தள்ளி வைத்தது தேர்வு வாரியம்
ADDED : செப் 29, 2011 09:40 PM
சென்னை : புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகே தேர்வுக் கடிதம் அனுப்பப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, ஆதி திராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றுக்காக, 4,000 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தேர்வுக் கடிதங்களை அனுப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது.
ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்வுக் கடிதங்களை அனுப்பக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதால், தன் நடவடிக்கையை தேர்வு வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்தபின், சம்பந்தப்பட்டவர்களுக்கு தேர்வுக் கடிதங்கள் அனுப்பப்படும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, அக்., கடைசி வாரத்தில் தான், தேர்வுக் கடிதங்கள் அனுப்பப்படும். நவம்பருக்குள், அனைவரும் அந்தந்த துறைகளில் பணி நியமனம் செய்யப்படுவர்.