Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/விதவை தாய்மார்களுக்கு உதவி

விதவை தாய்மார்களுக்கு உதவி

விதவை தாய்மார்களுக்கு உதவி

விதவை தாய்மார்களுக்கு உதவி

ADDED : செப் 16, 2011 02:22 AM


Google News
ஊட்டி: ஊட்டி அருகே தூனேரியில் அ.தி.மு.க.,சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொரை தலைமை வகித்தார். ரவி என்பவர் நலிந்த ஆதரவற்ற விதவை தாய்மார்கள் தொள்ளியம்மாள்,மாதியம்மாள், லட்சுமியம்மாள் ஆகியோருக்கு மாதம் 300 ரூபாய் வீதம் ஆயுட்கால உதவி வழங்கினார். 'தூனேரி அரசு பள்ளியில் பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவியருக்கு மறைந்த ராஜூ நினைவாக ஆண்டுதோறும் 6000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. நாக்குபெட்டா தலைவர் ஐயாரு, ஊர் தலைவர் மாதாகவுடர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் போஜன், ரங்கன், காந்தன், ராமன், ஊர் பெரியோர்கள் நஞ்சன், லிங்கன், பிட்டஅஜ்ஜன், ராஜூ, தோண்டன் உட்படபலர் பங்கேற்றனர். தொரை நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us