/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/வங்கிகளில் காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்புவங்கிகளில் காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
வங்கிகளில் காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
வங்கிகளில் காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
வங்கிகளில் காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : செப் 23, 2011 01:07 AM
பெரம்பலூர்: 'அனைத்து தேசியமயமாக்கப்பட்ட (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தவிர) வங்கிகளிலும் காலியாக உள்ள 'கிளார்க்' (எழுத்தர்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து தேசியமயமாக்கப்பட்ட (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தவிர) வங்கிகளிலும் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கு பொது எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இப்பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது ப்ளஸ் 1 வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 28 வயது வரையுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு. பொது பிரிவினர் 350 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 50 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் செப்., 23ம் தேதியும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப். 24ம் தேதியாகும். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் 27.11.2011ம் தேதியுமாகும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதே ஆன்லைனில் பெறலாம். விண்ணப்பித்த நபர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வங்கி பயிற்சியாளர்கள் மற்றும் மாதிரி பயிற்சி மைய ஆசிரியர்கள் மூலம், இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இலவச பயிற்சி பெற விரும்புவோர் தங்களது விவரங்களை டெலிபோன் நம்பருடன், வரும் செப்., 29ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.