Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'

மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'

மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'

மவுசு குறையாத வேலாயுதம்பாளையம் வெற்றிலை :விவசாயிகளை வாட்டுகிறது "விலை!'

ADDED : ஜூலை 24, 2011 01:14 AM


Google News

கரூர்: வேலாயுதம்பாளையம் வெற்றிலைக்கு வெளி மாநிலங்களில் மவுசு அதிகரித்து வருகிறது.

வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்த போதும், வேலாயுதம்பாளையம் வெற்றிலைக்கு மார்க்கெட்டில் மவுசு குறைய வில்லை. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல், சேமங்கி, நடையனூர், மரவாபாளையம், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கற்பூரம், பச்சைக்கொடி, இளங்கால், முதுகால் ஆகிய வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. புகளூர் பாசன வாய்க்கால் மூலம் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை பயிடுவதற்காக தனி வாய்க்கால்கள் வெட்டப்பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் விளைவதால், நீண்டநாள் பசுமை நிறம் மாறாமல் இருக்கிறது. இதனால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளிமாநிலங்களுக்கு இங்கிருந்து வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.



கடந்த சில ஆண்டாக வெளிமாநிலங்களுக்கும், உள்ளூர் மார்க்கெட்டிலும் மலிவு விø லக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெற்றிலை, கடந்த மாதம் முகூர்த்த சீஸன் இருந்ததால் வெ ற்றிலை தேவை அதிகரித்தது. அதோடு விலையும் கூடியது. வெற்றிலைக்கு ஏற்ற விலை கிø டத்ததால், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கு வெற்றிலை வியாபாரிகள் கொள்முதல் செய்து எடுத்துச் சென்றனர்.



இதுகுறித்து வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது: வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியில் விளையும் வெற்றிலை ஒரு கவுலி(102) வெற்றிலை கொண்டது. 104 கவுலிகள் கொண்டது சுமை என நடைமுறையில் உள்ளது. தற்போது இளங்கால் பச்சைக்கொடி ஒரு சுமை 2,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கற்பூர வெற்றிலை கடந்த முகூர்த்த சீஸனில் ஒரு கூடை 600 முதல் 750 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு கூடை 320 ரூபாய், ஒரு கவுலி 16 ரூபாய் என தரத்துக்கு ஏற்ற விலையில் வீழ்ச்சியடைந்துள்ளன.



கடந்த மாத சீஸன் ஆரம்பித்ததால் விலையேறியது உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு பெரிதும் வரவேற் பை பெற்று தேவை அதிகரித்திருந்தது. இதே நிலை நடப்பாண் டு முழுவதும் நீடித்தால் விவசாயத்துக்கு வாங்கிய கடன் அடை ந்து விடலாம் என நினைத்திருந்தோம். ஆனால், அதற்குள் விø ல வீழ்ச்சியடைந்து விட்டது.

தொடர்ந்து வெற்றிலை விலை வீழ்ச்சியாக இருந்தால் விவசாயிகள் செலவு செய்த பணத்தை கூட ஈட்ட முடியாது. விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடு செய்தால் வெற்றிலை விவசாயம் தொடர முடியும், இல்லையென்றால் வெற்றிலை விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us