Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவுரவம்; சாலைக்கு பெயர் சூட்ட தீர்மானம்!

ADDED : ஜூன் 30, 2025 01:29 PM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் டிமான்டி சாலைக்கு, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் இன்று (ஜூன் 30) காலை 10:00 மணியளவில், மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டுவதற்கு, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாடல்ஸ் சாலையை எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்யவும் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன், 1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். சின்ன வயதிலேயே நடிகராகவும், பாடகராகவும் தான் வர வேண்டும் என விஸ்வநாதன் ஆசைப்பட்டார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர், டி.ஆர்.பாப்பா மூலமாக எஸ்வி வெங்கட்ராமின் இசை குரூப்பில் சேர்ந்தார். அப்போது முதல் இனி நமது பயணம் இசையில் தான் என முடிவெடுத்தார்.

விஸ்வநாதனுக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். பிலிம்பேர், வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட நிறைய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்; ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us