/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/நோயாளிகளிடம் நகை பறிப்பு:ஓசூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுநோயாளிகளிடம் நகை பறிப்பு:ஓசூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
நோயாளிகளிடம் நகை பறிப்பு:ஓசூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
நோயாளிகளிடம் நகை பறிப்பு:ஓசூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
நோயாளிகளிடம் நகை பறிப்பு:ஓசூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 26, 2011 12:18 AM
ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில் விபத்துகளில் காயமடைந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், இறந்தவர்கள் கழுத்தில் கிடக்கும் தங்க நகைகளை மருத்துவ பணியாளர்கள் திருடுவதாக புகார் எழுந்துள்ளது.
நேற்று தீக்காயம் அடைந்து சிகிச்சைக்கு வந்த பெண் அணிந்திருந்த நகை மாயமானதால், ஆவேசமடைந்த உறவினர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-பெங்களூரு (என்.ஹெச்-7), கிருஷ்ணகிரி-சென்னை (46), புதுச்சேரி-கிருஷ்ணகிரி (66), ஓசூர்-சர்ஜாபூர் (207), கிருஷ்ணகிரி-குப்பம் (219) ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளும், ஏராளமான மாவட்ட சாலைகள் செல்கிறது. ஓசூர் வழியாக செல்லும் கன்னியாகுமரி - பெங்களூரு நான்கு வழிச்சாலையில் தினம் ஏராளமான விபத்துகள் நடக்கிறது. அதே போல், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டையில் தினம் ஏராளமான அடிதடி சம்பவங்கள், தற்கொலைகள், தற்கொலை முயற்சி மற்றும் சாலை விபத்துகள் நடக்கிறது. இந்த சம்பவங்களில் பலியாவோர் மற்றும் படுகாயம் அடைவோர் அவசர சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை முடிந்தபின் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகள், படுகாயம் அடைந்து சுயநினைவு இழந்து சிகிச்சைக்காக வருபவர்கள் கழுத்து, கைகளில் அணிந்து இருக்கும் நகைகளை குறி வைத்து மருத்துவமனை பணியாளர்கள் திருடுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியதாவது: பொதுவாக காயமடைந்தவர்கள் முதலில் உடனடியாக அவசர சிகிச்சை மையத்துக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வசதியாக மருத்துவ பணியாளர்கள் படுகாயம் அடைந்தவர்களுடைய ஆடைகளை களைந்து சுத்தம் செய்வார்கள். அந்த அறையில் அவர்களை தவிர வேறு யாரும் இருப்பதில்லை. நோயாளிகளின் உறவினர்கள் கூட அங்கு அனுமதிப்பதில்லை. உறவினர்கள், நோயாளியின் நிலை மற்றும் அவர்களுடைய சிகிச்சையை பற்றிதான் பதட்டமாக இருப்பார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி, மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், நோயாளிகள் அணிந்து இருக்கும் நகைகளை திருடி விடுகின்றனர். மேல் சிகிச்சைக்கு செல்லும் அவசரத்தில் நோயாளிகளுடைய உறவினர்களும் அவர்களுடைய நகைகள் மாயமானது பற்றி அறிவதில்லை. அதேபோல், விபத்தில் இறக்கும் அடையாளம் தெரியாதவர்களுடைய நகைகளையும் மருத்துவ பணியாளர்கள் திருடுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று ஓசூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ரவியின் மனைவி ராதா (26) குடும்பத்தகராறில், மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். சிகிச்øகாக அவரை உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, ராதா கழுத்தில் தாலி செயினுடன் இரண்டு பவுன் செயினும் அணிந்திருந்தார். முதலுதவி சிகிச்சை முடிந்த பின், திடீரென்று ராதாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ரவி மற்றும் உறவினர்கள் டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கடும் வாக்குவாதம் செய்து கலாட்டாவில் ஈடுப்பட்டனர். இதனால், பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதனாம் செய்து விசாரிக்கின்றனர்.