/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் விபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?
காரைக்கால் : காரைக்காலில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் டெம்போக்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரைக்காலில் பஸ் செல்ல முடியாத கிராமப் பகுதிக்கு மக்கள் நலனுக்காக டாடாமேஜிக் டெம்போ வாகனங்களுக்கு மாவட்ட போக்குவரத்து துறை அனுமதி அளித்தது.
ஆனால் அதைக் காற்றில் பறக்கவிட்டு டெம்போக்களில் அளவுக்கு அதிகமாக 30 பேரை ஏற்றிக் செல்கின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்துறையினரும், போக்குவரத்து போலீசாரும் இதை கண்டும் காணாதது போல் உள்ளனர்.விபத்து ஏற்பட்ட பின் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பது சிறந்தது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் டெம்போக்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.