/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நள்ளிரவில் வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகைகள் திருட்டுநள்ளிரவில் வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகைகள் திருட்டு
நள்ளிரவில் வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகைகள் திருட்டு
நள்ளிரவில் வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகைகள் திருட்டு
நள்ளிரவில் வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகைகள் திருட்டு
ADDED : ஜூலை 26, 2011 12:16 AM
புதுச்சேரி : தனியார் கம்பெனி உரிமையாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்து 10 சவரன் தங்க நகைகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியார் நகர் முல்லை நகர் 2வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மணிமாறன் (36). இவர், ரெட்டியார்பாளையத்தில் பிளாஸ்டிக் மோல்டிங் கம்பெனி வைத்துள்ளார்.வீட்டில் நேற்று காலை பார்த்தபோது, அறைக்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள், ஒரு மொபைல் போனை காணவில்லை.இது குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது, மணிமாறன் வசிக்கும் வீட்டின் பின்பக்க கதவிற்கு தாழ்பாள் கிடையாது. இதை அறிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் நேற்றிரவு புகுந்து திருடியது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, நள்ளிரவில் புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.