Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேனர் கலாசாரத்திற்கு தடை விதிக்கவேண்டும் அனந்தராமன் வலியுறுத்தல்

பேனர் கலாசாரத்திற்கு தடை விதிக்கவேண்டும் அனந்தராமன் வலியுறுத்தல்

பேனர் கலாசாரத்திற்கு தடை விதிக்கவேண்டும் அனந்தராமன் வலியுறுத்தல்

பேனர் கலாசாரத்திற்கு தடை விதிக்கவேண்டும் அனந்தராமன் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 26, 2011 12:15 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரியில் பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க.

செயலாளர் அனந்தராமன் கூறினார்.பா.ம.க., சார்பில் பசுமை தாயகம் நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள ராஜிவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடைகளை பா.ம.க., செயலாளர் அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் ஆகியோர் வழங்கினர்.தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று, வில்லியனூர் விவேகானந்தர் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கட்சியின் மாநில ஆலோசகர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பொன் செல்வராஜ், துணை செயலாளர் ஜெயபாலன், ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின், அனந்தராமன் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி பா.ம.க., மற்றும் பசுமை தாயகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25ம் தேதி பசுமை தாயகம் நாள் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒரு நல்ல சுற்றுச்சூழல் அமைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடந்தது.நமது புதுச்சேரி ஒரு சிறிய எழில்மிகு மாநிலம். குடிப்பதற்கு, நல்ல குடிநீர், காற்றுவசதி, மாசுபடாத இயற்கை வளம் உள்ள ஒரு மாநிலமாகும். இங்கு பேனர், போஸ்டர் கலாசாரம் தலைதூக்கி உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கிறது. அதன் பிறகு இரு மாதங்கள் கடைபிடிக்கப்படும் அந்த சட்டம் காற்றில் பறக்க விடப்படுகிறது. எனவே அரசியல் நோக்கமின்றி பேனர் கலாசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us