ADDED : ஜூலை 26, 2011 12:14 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 26) நடக்கிறது.
தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் இன்று மாலை 2 மணிக்கு கிருஷ்ணகிரி வெல்கம் மஹாலில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேசன் தலைமை வகிக்கிறார். மாநில இளைஞர் அணி துணைசெயலாளர் சுகவனம் எம்.பி., மாநில மகளிர் அணி துணை தலைவர் காஞ்சனா கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். 'ஆகஸ்ட் 1ம் தேதி தி.மு.க., சார்பில் காவல் துறையை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், கோவை பொதுக்குழு தீர்மானங்களை விளக்கிட மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துதல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள்' குறித்து விவாதிக்கப்படவுள்ளது.கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.