/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூர் அருகே பெண் போலீஸ் சாவு: ரயிலில் பாய்ந்து காதலன் தற்கொலைஅரியலூர் அருகே பெண் போலீஸ் சாவு: ரயிலில் பாய்ந்து காதலன் தற்கொலை
அரியலூர் அருகே பெண் போலீஸ் சாவு: ரயிலில் பாய்ந்து காதலன் தற்கொலை
அரியலூர் அருகே பெண் போலீஸ் சாவு: ரயிலில் பாய்ந்து காதலன் தற்கொலை
அரியலூர் அருகே பெண் போலீஸ் சாவு: ரயிலில் பாய்ந்து காதலன் தற்கொலை
ADDED : செப் 09, 2011 01:59 AM
அரியலூர்: அரியலூர் அருகே, நேற்று பெண் போலீஸ் ஒருவர், மர்மமான முறையில் இறந்தார்.
சடலத்தை நேரில் பார்த்த அவரது காதலன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பனையடி கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகள் சரஸ்வதி (29). 2009ம் ஆண்டு, போலீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். ஜெயங்கொண்டம் அருகே, மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் உதவி பேராசிரியர் கார்த்திகேயன்(30). இவரும், பெண் போலீஸ் சரஸ்வதியும் ஒருவரை, ஒருவர் காதலித்தனர். சில வாரங்களுக்கு முன், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. செந்துறை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரானிக் ஓட்டு பெட்டிகளுக்கான பாதுகாப்புப் பணியில், சரஸ்வதி ஈடுபடுத்தப்பட்டிருந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சரஸ்வதி, நேற்று அதிகாலை திடீரென இறந்தார். மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கின்றனர். தகவலறிந்த சரஸ்வதியின் காதலன் கார்த்திகேயன், செந்துறை தாலுகா அலுவலகத்துக்கு சென்று, சரஸ்வதியின் உடலை பார்த்து கதறி அழுதார். நேற்று காலை 8 மணிக்கு, செந்துறையிலிருந்து குழுமூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வேகேட் பகுதிக்கு சென்ற கார்த்திகேயன், திருச்சியிலிருந்து சென்னை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கார்த்திகேயன் சடலம் பிரேத பரிசோதனைக்காக, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கும், பெண் போலீஸ் சரஸ்வதியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண் போலீஸின் மர்மச்சாவு பற்றி செந்துறை போலீஸாரும், கார்த்திகேயன் தற்கொலை குறித்து, அரியலூர் ரயில்வே போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.