1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது
1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது
1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது
ADDED : ஜூலை 15, 2011 12:51 AM
கொச்சி:சர்வதேச சந்தையில், 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஐந்து கிலோ எடை கொண்ட, போதைப் பொருளான ஹாஷிஷ் ஆயில், வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் சிக்கியது.
இது தொடர்பாக, ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கேரளா கொச்சி அருகே, இரட்டையார் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அதிகாரிகளை கண்டதும், கும்பலில் இருந்து சிலர் தப்பி ஓடிவிட்டனர். அதிகாரிகளிடம் சிக்கிய நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்த, பிஜூ ஜோசப், 29, என, தெரிந்தது.அவர் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ஐந்து பிளாஸ்டிக் பாக்கெட்டுக்களிலிருந்து, ஐந்து கிலோ எடை கொண்ட போதைப் பொருளான ஹாஷிஷ் ஆயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கேரளாவில் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். சர்வதேச சந்தை மதிப்பு, 1.25 கோடி ரூபாய்.அவற்றை கைப்பற்றிய போலீசார், அவருடன் பிடிப்பட்ட மற்றொரு நபரை விசாரணை செய்து, எச்சரித்து அனுப்பி விட்டனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.