Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஒரே நாளில் 43 விருப்ப மனு திருச்சி ம.தி.மு.க., உற்சாகம்

ஒரே நாளில் 43 விருப்ப மனு திருச்சி ம.தி.மு.க., உற்சாகம்

ஒரே நாளில் 43 விருப்ப மனு திருச்சி ம.தி.மு.க., உற்சாகம்

ஒரே நாளில் 43 விருப்ப மனு திருச்சி ம.தி.மு.க., உற்சாகம்

ADDED : செப் 13, 2011 01:04 AM


Google News
திருச்சி: திருச்சி மாநகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட நேற்று ஒரே நாளில் ம.தி.மு.க., சார்பில் 43 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த சட்டசபை தேர்தலோடு, அ.தி.மு.க.,வுடனான நீண்ட காலக்கூட்டணியை முறித்து கொண்ட ம.தி.மு.க., தேர்தலிலும் போட்டியிடாமல், வெறும் பார்வையாளராக மட்டும் பங்கேற்றது. தேர்தல் புறக்கணிப்பால் ம.தி.மு.க.,வின் செல்வாக்கு மக்களிடையே உயர்ந்துள்ளது. மேலும், முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், ஈழத்தமிழர் பிரச்னையில் வைகோவின் பக்கம் அதிர்ஷ்டக்காற்று பலமாகவே வீசுகிறது. இதற்கிடையே, 'திருச்சி மேற்குத் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம்' என்றும் வைகோ அறிவித்துள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க.,வினர் உள்ளாட்சித் தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் வெகு உற்சாகமாகவே இருக்கின்றனர். அதற்கு நேற்று துவங்கிய விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியே நல்ல உதாரணம். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 3,000 ரூபாயும், மேயர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும் விருப்ப மனுக் கட்டணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரே நாளில் 26 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 43 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். மாவட்டச்செயலாளர் மலர்மன்னன், மாவட்டத்துணைச் செயலாளர் சோமு, பொருளாளர் தியாகராஜன், அவைத்தலைவர் துரையரசன் மனுக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 18ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us