/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.37 லட்சம் மானிய கடன் இலக்குவேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.37 லட்சம் மானிய கடன் இலக்கு
வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.37 லட்சம் மானிய கடன் இலக்கு
வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.37 லட்சம் மானிய கடன் இலக்கு
வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.37 லட்சம் மானிய கடன் இலக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 250 பேருக்கு 37 லட்ச ரூபாய் மானியத்துடனான கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கில் புதிய தொழில் தொடங்குதல் தொழிற்சாலையை நிர்வாகம் செய்தல் குறித்து பொள்ளாட்சி கயிறு வாரிய மண்டல அலுவலர் பூபாலன், கிருஷ்ணகிரி மாவட்ட குறு, சிறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் ஏகம்பவாணன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக துணை பொது மேலாளர் விஜய்பாஸ்கர், சென்னை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர் ஆழகிரிசாமி ஆகியோர் விளக்கி கூறினார்கள்.
கருத்தரங்கில் கலெக்டர் மகேஸ்வரன் பேசியது: தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முறையிலும் தொழில்நுட்ப மேம்பாட்டு வளர்ச்சியிலும் தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலீட்டு மானியமாக 12 தொழில் நிறுவனங்களுக்கு 1 கோடியே 22 லட்ச ரூபாய் மற்றும் 3 தொழில் நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மின்னாக்கி மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் துவங்கிட வேண்டி படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250 பேருக்கு 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கூடி கடன் வழங்க இலக்கு நிர்ணியக்கப்பட்டு தற்போது ஆணை பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலும், சேவை தொழிலுக்கு 3 லட்ச ரூபாய் வரையிலும் வியாபாரத்துக்கு 1 லட்ச ரூபாய் வரையிலும் 15 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்ட பொதுப்பிரினரும், 45 வயதுக்குட்பட்ட சிறப்பு பிரிவினரும் பயன் அடையலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். செப்டம்பர் 15ம் தேதி தேர்வுக்குழு கூடி பயனாளிகளை தேர்வு செய்யவுள்ளார்கள். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி புதியதாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கருத்தரங்கில் 21 தொழில் நிறுவனங்களுக்கு மின் மானியமாக 6 லட்ச ரூபாய், ஐந்து தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக 20 லட்ச ரூபாய், மதிப்பு கூட்டு வரிமானியமாக 49 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றுக்கான செயல்முறை ஆணைகளை கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார். கருத்தரங்கில் திட்ட இயக்குனர் ராமையா, இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் கார்த்திகேயன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சிதம்பரநாதன், ஓசூர் குறு சிறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் சம்பத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் அரசு நன்றி கூறினார்.