/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அம்பேத்கர் சிலை அவமதிப்பை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்அம்பேத்கர் சிலை அவமதிப்பை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
அம்பேத்கர் சிலை அவமதிப்பை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
அம்பேத்கர் சிலை அவமதிப்பை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
அம்பேத்கர் சிலை அவமதிப்பை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
ADDED : அக் 15, 2011 02:33 AM
புதுச்சேரி : கல்பாக்கத்தில் அம்பேத்கர் சிலையை அவமதித்ததைக் கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு, ஐந்தாமாண்டு சட்டப்படிப்புகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கல்பாக்கத்தில் அம்பேத்கர் சிலையை அவமதித்ததைக் கண்டித்து நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அங்கிருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள் பெரிய காலாப்பட்டு இ.சி.ஆர்.,முருகன் கோவில் சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இ.சி.ஆரில் வாகனங்கள் ஸ்தம்பித்து அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காலாப்பட்டு போலீசார் மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


