/உள்ளூர் செய்திகள்/சேலம்/தனிப்பெரும்பான்மை பெற்ற தி.மு.க.,சர்ச்சைகளை கடந்து மீண்டும் சாதிக்குமா?தனிப்பெரும்பான்மை பெற்ற தி.மு.க.,சர்ச்சைகளை கடந்து மீண்டும் சாதிக்குமா?
தனிப்பெரும்பான்மை பெற்ற தி.மு.க.,சர்ச்சைகளை கடந்து மீண்டும் சாதிக்குமா?
தனிப்பெரும்பான்மை பெற்ற தி.மு.க.,சர்ச்சைகளை கடந்து மீண்டும் சாதிக்குமா?
தனிப்பெரும்பான்மை பெற்ற தி.மு.க.,சர்ச்சைகளை கடந்து மீண்டும் சாதிக்குமா?
ADDED : செப் 17, 2011 03:20 AM
சேலம்: கடந்த, 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., 29
வார்டுகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் சேலம் மேயர் பதவியை
கைப்பற்றியது. சமீபத்தில், மாநகர தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய
நிர்வாகிகள் பலர் சர்ச்சையில் சிக்கிய சம்பவத்தால், மாநகராட்சியில்,
தி.மு.க.,வின் ஆதிக்கம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த, 2006ம்
ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகராட்சியில், தி.மு.க., 38
வார்டுகளில் போட்டியிட்டது. தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., பா.ம.க.,
தலா, 10 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஐந்து வார்டுகளிலும்,
இந்திய கம்யூனிஸ்ட் ஒரு வார்டிலும் போட்டியிட்டது.
அ.தி.மு.க., 54 வார்டுகளில் போட்டியிட்டது. கூட்டணியில் இருந்த,
ம.தி.மு.க., 6 வார்டுகளில் களம் இறங்கியது. சுயேட்சையாக களம் இறங்கிய
தே.மு.தி.க., 59 வார்டுகளிலும், தேசிய கட்சிகளான பா.ஜ., 14 வார்டுகளிலும்,
பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு வார்டிலும் போட்டியிட்டது.மாநகராட்சியில், 38
வார்டில் போட்டியிட்ட தி.மு.க., 29 வார்டுகளை கைப்பற்றியது. கூட்டணி
கட்சிகளான காங்கிரஸ், பா.ம.க., ஆகியவை தலா மூன்று வார்டுகளிலும், இந்திய
கம்யூனிஸ்ட் ஒரு வார்டிலும், தே.மு.தி.க., மூன்று வார்டுகளிலும், சுயேட்சை
வேட்பாளர்கள் மூன்று வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.அதிகப்பட்சமாக, 54
வார்டுகளில் களம் இறங்கிய அ.தி.மு.க.,வால், 16 வார்டுகளை மட்டுமே கைப்பற்ற
முடிந்தது. கூட்டணியில் இருந்த, ம.தி.மு.க., ஒரு வார்டில் கூட வெற்றி
பெறவில்லை.சேலம் மாநகராட்சியில், தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்றது.
எனவே, மேயர், துணை மேயர் ஆகியோர் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய மண்டல குழு தலைவர்
பதவிகளையும் எளிதில் கைப்பற்றினர்.கடந்த உள்ளாட்சி தேர்தலில்,
தனிப்பெரும்பான்மையுடன் விளங்கிய, தி.மு.க., வுக்கு சறுக்கல் ஏற்படுத்தும்
விதமாக, ஐந்து ஆண்டுகளில், மேயர், துணை மேயர் உள்பட பல கவுன்சிலர்கள்
கடும் சர்ச்சையில் சிக்கினர். மேலும், தி.மு.க., வின் முக்கிய பொறுப்பில்
இருந்தவர்களும், பல்வேறு புகாரில் சிக்கியது, சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாநகராட்சியில், சர்ச்சைகளை கடந்து, கடந்த
உள்ளாட்சி தேர்தலை போலவே, வரும் தேர்தலிலும், தி.மு.க.,
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.