Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிவகங்கையில் 9வது மாநில வாள்விளையாட்டு போட்டி

சிவகங்கையில் 9வது மாநில வாள்விளையாட்டு போட்டி

சிவகங்கையில் 9வது மாநில வாள்விளையாட்டு போட்டி

சிவகங்கையில் 9வது மாநில வாள்விளையாட்டு போட்டி

ADDED : ஆக 17, 2011 11:46 PM


Google News
சிவகங்கை : ''மாநில அளவிலான 9வது வாள் சண்டை போட்டி சிவகங்கையில் ஆக.25ல் துவங்குகிறது'' என மாநில வாள் விளையாட்டு கழக தலைவரும், சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி.,யுமான ஜான்நிக்கல்சன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,'' மாநிலத்தில் 21 மாவட்டங்களில் வாள் விளையாட்டு கழகம் உள்ளன. 22வது மாவட்டமாக சிவகங்கையில் இக்கழகம் தோற்றுவித்துள்ளோம். இது பாரம்பரிய விளையாட்டு. நாசிக்கில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் நம் வீரர்கள் 4 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். 1916ல் இந்த விளையாட்டு தோன்றியது. இந்தியாவில் மணிப்பூர், கேரளா, பஞ்சாப், தமிழ்நாட்டில் இவை விளையாடப்படுகிறது. தமிழக அரசு இப்போட்டிக்கு நல்ல உற்சாகம் தருகிறது. இதில் 40 வித பதக்கங்களை பெறலாம். வாள் விளையாட்டில் 'எப்பி', 'சேபர்', 'பாயில்' என மூன்று விதம் உண்டு.மாநில போட்டி:சிவகங்கையில், மாநில வாள் விளையாட்டு கழகம் சார்பில், 9 வது மாநில வாள் சண்டை போட்டி ஆக.25 முதல் 28 வரை நடக்கிறது. வயது 14 மற்றும் 17க்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர், 'கேடட்' பிரிவு போட்டிகள் நடக்கும். மாநில அளவில் 24 அணிகள் பங்கேற்கும்,'' என்றார். வாள் விளையாட்டு கழக மாநில துணை தலைவர் சேதுகுமணன், மன்னர் கல்வி நிறுவன முகவாண்மை குழு உறுப்பினர் மகேஷ்துரை, மன்னர் கல்வி நிறுவன செயலாளர் குமரகுரு, தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்,போட்டி குழு உறுப்பினர்கள் கருணாநிதி, அப்தாகீர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us