ADDED : செப் 08, 2011 10:34 PM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கருப்பூரில் பஸ் மோதி டூவீலரில் சென்ற அறந்தாங்கியை சேர்ந்த அயுப்கான், 27.
பலியானார். அறந்தாங்கியில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணிக்கு அறந்தாங்கி நோக்கி சென்றார். எஸ்.எஸ்., கோட்டை அருகே கருப்பூர் பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் விபத்திற்குள்ளாகி, அயுப்கான் பலியானார்.