சொத்துக்குவிப்பு வழக்கு: 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 20, 2011 04:32 PM
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி சசிகலா மற்றும் இளவரசி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது.
மேலும் இது தொடர்பான வழக்கை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசுவாமி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.