திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் உள்ள குளங்களை முழுமையாக தூர் வார
வேண்டும் என கூறி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர செயலாளர் மார்க்ஸ் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் முருகையன், நிர்வாக குழு உறுப்பினர் யோகநாதன், முன்னாள்
நகர செயலாளர் ஆதித்தன், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் நிர்மலா உட்பட பலர்
பங்கேற்றனர்.அனைத்து குளங்களையும் தூர் வார்வதோடு, தெற்கு காடு, சித்தேரி
குளத்தை முழுமையாக தூர் வாரி படிகட்டுகள் அமைத்து தர வேண்டும் என
வலியுறுத்தப்பட்டது.