பொட்டு சுரேஷ் வீட்டில் முக்கிய ஆவணங்கள் : சோதனை செய்த ஏ.டி.எஸ்.பி., தகவல்
பொட்டு சுரேஷ் வீட்டில் முக்கிய ஆவணங்கள் : சோதனை செய்த ஏ.டி.எஸ்.பி., தகவல்
பொட்டு சுரேஷ் வீட்டில் முக்கிய ஆவணங்கள் : சோதனை செய்த ஏ.டி.எஸ்.பி., தகவல்
ADDED : ஜூலை 21, 2011 12:39 AM
மதுரை: மதுரையில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் (சுரேஷ்பாபு) வீட்டில் நேற்று நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக, ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தனர். நேற்று மாலையில் துவங்கிய சோதனை, இரவு 9.20 மணி வரை நடந்தது. சோதனையின் போது, வீட்டில் பூட்டப்பட்டிருந்த ஒரு லாக்கர் இருந்தது. போலீசார் அதற்காக சாவியை வீட்டில் இருந்த அவரது சகோதரரிடம் கேட்டனர். தன்னிடம் சாவி இல்லை என தெரிவித்ததால், லாக்கரை உடைக்க சம்மட்டி எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் மொபைல் போனில் அவரது சகோதரர் மற்றும் கட்சியினர் வேறு நபர்களிடம் தொடர்பு கொண்டனர். மொபைலில் பேசிய நபர் சொன்ன தகவலின் பேரில், சாவி இருக்கும் இடத்தை அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பின்னர் லாக்கர் திறக்கப்பட்டது. சோதனையில் ஈடுபட்ட ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் கூறுகையில், '' சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை விரைவில் தெரிவிப்போம்,'' என்றார். கட்சியினர் கூறுகையில், '' போலீசாரிடம் ஒரு ஆவணமும் சிக்கவில்லை. பொட்டு சுரேஷ் பாஸ்போர்ட் மற்றும் பான்கார்டு இரண்டையும் தான் கைப்பற்றினர்,'' என்றனர்.


