Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

ADDED : அக் 14, 2011 11:20 PM


Google News
காரைக்கால்: காரைக்காலில், கல்லூரி மாணவி குரங்கு துரத்தியதால், 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

காரைக்கால் நிரவி கீழராஜ வீதியைச் சேர்ந்தவர் நைனா முகமது மகள் மஹபுநிஷா,19. காரைக்கால் அவ்வையார் கல்லூரியில், பி.எஸ்.சி., மனையியல் துறையில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மஹபுநிஷா, @நற்று காலை 8.45 மணிக்கு, கல்லூரிக்கு வந்தார். இரண்டாவது மாடியில் உள்ள தனது வகுப்பறை வராண்டாவில், பேக், செல்போன், பர்தா உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு நின்றிருந்தபோது, மாடியிலிருந்து திடீரென கீழே விழுந்தார். கல்லூரி வாயிலில் உள்ள மகளிர் காவல் நிலைய பெண் போலீசார், உடனடியாக மஹபுநிஷாவை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, காலை 9.45 மணிக்கு மஹபுநிஷா உயிரிழந்தார். கல்லூரி வளாகத்தைச் சுற்றியும், குரங்குகள் அதிகமாக உள்ளன. குரங்கு துரத்தியதால், மாணவி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து, அமைச்சர் ராஜவேலு, நாஜிம் எம்.எல்.ஏ., ஆகியோர் கல்லூரிக்குச் சென்று, மாணவி விழுந்த இடத்தைப் பார்வையிட்டு, மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அங்கு திரண்ட இஸ்லாமிய அமைப்பினர், கல்லூரியில் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே, விபத்து நடந்தது எனக் கூறி, இதற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வரிடம் பேசி, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ராஜவேலு உறுதியளித்தார். கல்லூரிக்கு விடுமுறை: மஹபுநிஷா இறந்ததால், சக மாணவிகள் கதறி அழுதனர். இதனால், கல்லூரி வளாகம் சோகத்தில் மூழ்கியது. மாணவி இறந்ததைத் தொடர்ந்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us