/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவைபள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்க மமமுக.,வினர் சார்பில் இன்று கரசேவை
திருநெல்வேலி : பேட்டையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மீட்பது தொடர்பாக மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இன்று(24ம் தேதி) கரசேவையில் ஈடுபடுகின்றனர்.
போலீசாரின் தடையை மீறி கரசேவை நடைபெறும் என அக்கட்சியினர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதையடுத்து கரசேவையில் ஈடுபடும் மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அக்கட்சியினரின் முக்கிய நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைøயாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.இதற்கிடையே,கடந்த சில நாட்களுக்கு முன் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கலெக்டர் வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி கலெக்டர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தில்லை கூத்த நாயனார் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் செய்யது அலி(35), பேட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்த மைதீன் அப்துல் காதர் மகன் செய்யது அலி(23) இருவரை கைது செய்தனர்.