/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/அடையாளம் தெரியாத வீலர் மோதி பெண் பலிஅடையாளம் தெரியாத வீலர் மோதி பெண் பலி
அடையாளம் தெரியாத வீலர் மோதி பெண் பலி
அடையாளம் தெரியாத வீலர் மோதி பெண் பலி
அடையாளம் தெரியாத வீலர் மோதி பெண் பலி
ADDED : செப் 23, 2011 01:08 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வீலர் மோதிய விபத்தில்
மூதாட்டி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை
சேர்ந்தவர் காசியம்மாள் (70). இவர் நேற்றுமுன்தினம் வயல்வேலைக்கு
சென்றுவிட்டு மாலை 6.30 மணியளவில் பைபாஸ் ரோட்டில் வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தார். அப்போது ஹீரோ ஹோண்டா வீலரில் சென்ற அடையாளம் தெரியாத நபர்
ஒருவர் மூதாட்டி மீது வீலரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில்
பலத்த காயமடைந்த காசியம்மாள் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை
பெற்றுவந்த காசியம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குன்னம்
இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.