ADDED : ஆக 12, 2011 12:00 AM
பள்ளிபாளையம்: கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணியை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணியை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாலம் கட்டுமானப் பணி எந்த நிலையில் உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, கலெக்டர் குமரகுருபரன், எம்.எல்.ஏ., பாஸ்கர், தொகுதி செயலாளர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.