/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ்கள் "ஜப்தி'விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ்கள் "ஜப்தி'
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ்கள் "ஜப்தி'
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ்கள் "ஜப்தி'
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ்கள் "ஜப்தி'
ADDED : செப் 28, 2011 01:08 AM
நாமக்கல்: சாலை விபத்தில் இறந்தவர் மற்றும் படுகாயமடைந்தவர்
குடும்பத்துக்கு, 5.40 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்காத, சேலம் கோட்ட
அரசு போக்குவரத்து கழக பஸ்கள், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் ஜப்தி
செய்யப்பட்டது.நாமக்கல் அலங்காநத்தத்தை சேர்ந்தவர் செங்கல் சூளை தொழிலாளி
கந்தசாமி. அவரது மனைவி இந்திராணி. கந்தசாமி, மனைவியுடன் கடந்த 2007ம் ஆண்டு
ஜூன் 25ம் தேதி மொபெடில் சென்று கொண்டிருந்தார். அலங்காநத்தம் பிரிவு சாலை
அருகே சென்றபோது, பின்னால் வந்த சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பஸ்
மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், கந்தசாமி சம்பவ
இடத்திலேயே பலியானார். இந்திராணி படுகாயமடைந்தார். இது குறித்து இந்திராணி
நாமக்கல் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் தனித்தனி வழக்கு தொடர்ந்தார்.
இந்திராணி சார்பில், வக்கீல் ருத்ரதேவி வாதாடினார்.விசாரணை நடத்திய
நீதிபதி, 2009ம் ஆண்டு அக்டோபரில், படுகாயமடைந்த இந்திராணிக்கு 47 ஆயிரம்
ரூபாய், சாலை விபத்தில் இறந்த கந்தசாமிக்கு, 4.93 லட்சம் ரூபாய் என,
மொத்தம் 5.40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பளித்தார். ஆனால்,
இழப்பீடுத் தொகை வழங்காமல், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தினர்
இழுத்தடித்து வந்தனர்.இது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
விசாரணை நடத்திய நீதிபதி, இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய
உத்தரவிட்டார். அதன்படி நேற்று நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், சேலம்- கரூர்
மற்றும் சேலம்- திருச்சி சென்ற சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு
சொந்தமான இரண்டு பஸ்சை அமீனா ஜப்தி செய்தார்.