பாதுகாப்பு ஏற்பாடு: ஜெ.தரப்பிற்கு பெங்களுரூ கோர்ட் உத்தரவு
பாதுகாப்பு ஏற்பாடு: ஜெ.தரப்பிற்கு பெங்களுரூ கோர்ட் உத்தரவு
பாதுகாப்பு ஏற்பாடு: ஜெ.தரப்பிற்கு பெங்களுரூ கோர்ட் உத்தரவு
ADDED : செப் 14, 2011 12:48 PM
பெங்களுரூ:சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அக்.20-ம் தேதி சிறப்பு கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராகவுள்ளார். இதற்காக செப்.21-ம் தேதிக்குள் அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஜெ.தரப்பிற்கு பெங்களுரூ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களுரூ சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. இதில்நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் வரமுடியாது என ஜெ, தாக்கல் செய்த மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் ஜெ. கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து , அக்.20-ம் தேதி ஆஜராக சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகல் கிடைத்ததும் 10 நாட்கள் அவகாசம் தர வேண்டும் என்ற கோரிக்கை பெங்களுரூ கோர்ட் நீதிபதியால் நிரகாரிக்கப்பட்டது. பின்னர் ஜெ.வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செப்.21-ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய ஜெ. தரப்பிற்கு பெங்களுரூ கோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது.