வெறி பிடித்த குதிரையை மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்
வெறி பிடித்த குதிரையை மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்
வெறி பிடித்த குதிரையை மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்
ADDED : செப் 20, 2011 11:04 PM
கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய குதிரையை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கச்சிராயப்பாளையம் பகுதியில் வெறிபிடித்து திரிந்த குதிரை ஒன்று, கடந்த சில மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த குதிரை கச்சிராயப்பாளையம், வடக்கனந்தல், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், கலெக்டர் மணிமேகலைக்கு புகார் மனு அனுப்பினர். கலெக்டர் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான குழுவினர், நேற்று மாலை 4 மணிக்கு மாதவச்சேரி கிராமத்தில் சுற்றித் திரிந்த குதிரையை, ஒரு மணி நேரம் போராடி மடக்கிப் பிடித்து, வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், கால்நடை துறையினர் மூலம் குதிரைக்கு மயக்க ஊசி செலுத்தி, வடக்கனந்தல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.


