/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி தியாகராஜன் வலியுறுத்தல்பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி தியாகராஜன் வலியுறுத்தல்
பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி தியாகராஜன் வலியுறுத்தல்
பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி தியாகராஜன் வலியுறுத்தல்
பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி தியாகராஜன் வலியுறுத்தல்
ADDED : ஆக 26, 2011 12:25 AM
புதுச்சேரி : 'பாகூரில் உள்ள பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை நடப்பு நிதியாண்டிலேயே செய்து தர வேண்டும்' என, தியாகராஜன் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், என்.ஆர். காங்., எம்.எல். ஏ., தியாகராஜன் எழுப்பிய கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டது. தியாகராஜன்: பாகூரில் உள்ள பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாமல் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி நடப்பு நிதியாண்டில் சரி செய்யப்படுமா? அமைச்சர் கல்யாணசுந்தரம்: நிதி நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தியாகராஜன்: அந்த பள்ளியில் கழிப்பிடம், குடிநீர், மதில் சுவர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. எனவே இந்த பணியை நடப்பு நிதியாண்டிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் கல்யாணசுந்தரம்: நடப்பு நிதியாண்டிலேயே எடுத்துக் கொள்ளப்படும்.