Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"அமைதியான தேசத்துக்கு காந்திய கொள்கை தேவை'

"அமைதியான தேசத்துக்கு காந்திய கொள்கை தேவை'

"அமைதியான தேசத்துக்கு காந்திய கொள்கை தேவை'

"அமைதியான தேசத்துக்கு காந்திய கொள்கை தேவை'

ADDED : அக் 04, 2011 01:04 AM


Google News

கோவை : ''தேசம் அமைதி காக்க, காந்திய கொள்கைகளை பின்பற்ற வேண் டும்'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் பேசினார்.அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை மற்றும் 'லீட் இந்தியா 2020' சார்பில் காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டு லீட் இந்தியா 2020 சார்பில், லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பெறும் பொருட்டு, இந்திய வரைபடம் வரைய பங்கேற்ற 12 அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவும் நடந்தது.பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் தலைமை வகித்து பேசியது: அகிம்சையின் அடையாளம் காந்தி. ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து மக்கள் வன்முறையில் ஈடுபடாமல், அவர்களை அறப்போர் நடத்த வழிவகுத்தது காந்தியின் சிறந்த பேச்சாற்றல். அவரின் எளிமையான வாழ்க்கையும், நாட்டின் மேல் கொண்ட பற்றும் மக்களை ஈர்த்தது. தேசத்தின் விடுதலைக்காக, வன்முறையை கையாளாமல், சத்யாகிரகம் மேற்கொண்டு அகிம்சையான முறையில் ஆங்கிலேயரை அணுகினார். அவ்வழியலே இந்திய கலாசாரமும், பண்பாடும் வளர்ந்தது. தீண்டாமை ஒழிக்க பாடுபட்டவரான இவர், அனைவராலும் போற் றப்பட்டார். தேசம் அமைதி காத் திட, காந்தியின் வழியில் அனைவரும் செல்ல வேண்டும்,'' என்றார்.லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மார்க்கெட்டிங் தலைவர் மூர்த்தி விருதுகள் வழங்கி பேசுகையில்,'' இந்தியா வரும் 2020ல் வல்லரசாவதில் மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். நம் தேசத்தில் திறமையும், அனுபவமும் வாய்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். தொடர் முயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும். அவ்வாறு, சாதனைகள் புரிய பல்வேறு முயற்சிகளும், புதுமைகளும் மேற்கொள்ள வேண்டும். லிம்கா புக் ஆப் ரெக்கார்டானது ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழியில் உள்ளது. தெலுங்கில் மொழிபெயர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, சாதனை புத்தகங்களில் இடம்பெற அனைவரும் முயற்சிக்க வேண்டும்,'' என்றார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஹேமா கருணாகரன், பல்கலை வேந்தர் மீனாட்சி சுந்தரம், ஆர்.ஏ.எப்., கமாண்டன்ட் ராஜேந்திரன் உள்ளிட்ட 12 அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. லீட் இந்தியா 2020 மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், கற்பகம் பல்கலை பேராசிரியர் உமா, பி.எஸ்.ஜி., கல்வி நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us