/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காதல் தகராறில் வாலிபரை கொலை செய்த மாணவன் உள்ளிட்ட 3 பேர் கைதுகாதல் தகராறில் வாலிபரை கொலை செய்த மாணவன் உள்ளிட்ட 3 பேர் கைது
காதல் தகராறில் வாலிபரை கொலை செய்த மாணவன் உள்ளிட்ட 3 பேர் கைது
காதல் தகராறில் வாலிபரை கொலை செய்த மாணவன் உள்ளிட்ட 3 பேர் கைது
காதல் தகராறில் வாலிபரை கொலை செய்த மாணவன் உள்ளிட்ட 3 பேர் கைது
ADDED : ஆக 05, 2011 12:47 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த, ப்ளஸ் 2 மாணவன் உள்ளிட்ட மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் அடுத்த நாகரசம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வலையகாரப்பட்டி அருகே கடந்த 1ம் தேதி மாந்தோப்பில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். நாகரசம்பட்டி இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குபதிவு செய்து கொலையான நபர் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கொலையான வாலிபர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த மதியழகன் (20) என தெரிந்தது. காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. பஞ்சப்பள்ளி அடுத்த தடிக்கல் கிராமத்தை சேர்ந்த மதியழகனின் நண்பர் அன்பு செழியன் (19). நண்பர்களான இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்தனர். இறுதியில் மதியழகனை காதலிப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அன்புசெழியன் மதியழகனை தீர்த்து கட்ட சதி திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த 1ம் தேதி மாலை காவேரிப்பட்டணத்துக்கு சினிமாவுக்கு போகலாம் என கூறி மதியழகனை அன்புசெழியன் பைக்கில் அழைத்து வந்துள்ளார். அன்பு செழியனின் நண்பர்களான காவேரிப்பட்டணத்தை அடுத்த சோப்பனூரை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் திருமால் (17) குப்பன் என்பவரின் மகன் அஜீத்குமார் (17) ஆகியோரையும் சினிமா தியேட்டருக்கு வரும்படி அன்பு செழியன் கூறியிருந்தார். காவேரிப்பட்டணத்தில் மேட்னி ÷ஷா பார்த்து விட்டு நான்கு பேரும் ஒரே பைக்கில் சோப்பனூர் நோக்கி சென்றுள்ளனர். வலையகாரப்பட்டி அருகே சென்ற போது அங்குள்ள தீர்த்திகிரி என்பவரது மாந்தோப்பில் அமர்ந்து நான்கு பேரும் பீர் குடித்துள்ளனர். போதை தலைகேறியதும் தான் காதலித்த பெண்ணை எப்படி நீ காதலிக்கலாம் என மதியழகனிடம் அன்பு செழியன் கேட்டு தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதும் ஆத்திரமடைந்த அன்பு செழியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மதியழகனை வெட்டியுள்ளார். அவர் கீழே விழுந்ததும் நண்பர்களான திருமால் மற்றும் அஜீத்குமார் ஆகியோருடன் சேர்ந்து மதியழகனின் கழுத்தை அன்புசெழியன் அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது. போலீஸார் அன்பு செழியன், மற்றும் திருமால், அஜீத்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இதில், திருமால் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில், ப்ளஸ் 2 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.