/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/விலை நிர்ணயத்தில் தொடர் இழுபறி :பணம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிவிலை நிர்ணயத்தில் தொடர் இழுபறி :பணம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
விலை நிர்ணயத்தில் தொடர் இழுபறி :பணம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
விலை நிர்ணயத்தில் தொடர் இழுபறி :பணம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
விலை நிர்ணயத்தில் தொடர் இழுபறி :பணம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
மஞ்சூர் : பசுந்தேயிலைக்கான மாதாந்திர விலை நிர்ணயத்தில் தொடர் இழுபறி ஏற்பட்டதன் காரணமாக தேயிலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, மேற்குநாடு, இத்தலார், கைக்காட்டி, மகாலிங்கம், கரும்பாலம், கட்டபெட்டு, எப்பநாடு, பிராண்டியா, சாலிஸ்பரி, பந்தலூர் உள்ளிட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர்.தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலைகளை அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகித்து அதற்கான தொகையை பெற்று வருகின்றனர்.
அங்கத்தினர்கள் வினியோகிக்கும் பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம், குன்னூர் இன்கோ சர்வ் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் தனி அலுவலர்கள் முன்னிலையில் மாதந்தோறும் முதல் வாரத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான தொகை அங்கத்தினர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த சில மாதங்களாக பசுந்தேயிலைக்கான விலை படிப்படியாக குறைந்து, கிலோவுக்கு 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரைக்கு கிடைத்து வருவதால் தேயிலை விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அங்கத்தினர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம், இதுவரை முடிவு செய்யப்படவில்லை.குன்னூர் இன்கோ சர்வ் அலுவலகத்தில் 3 முறை அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டும், விலை நிர்ணயம் செய்வதில் தொடர் இழுப்பறி நிலவி வருகிறது.இதனால், பசுந்தேயிலைக்கான 'செட்டில்மென்ட்' தொகை கிடைக்காத விவசாயிகள் பல்வேறு தேவைகளுக்கு பணமின்றி அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து குன்னூர் இன்கோ சர்வ் பொதுமேலாளர் நாகராஜனிடம் கேட்டபோது,''பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. வரும் 25ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளது,'' என்றார்.


