பதவி உயர்வுக்காக பயன்படுத்தப்பட்டாரா சிறுமி? ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் விசாரணை
பதவி உயர்வுக்காக பயன்படுத்தப்பட்டாரா சிறுமி? ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் விசாரணை
பதவி உயர்வுக்காக பயன்படுத்தப்பட்டாரா சிறுமி? ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் விசாரணை
ராமநாதபுரம் : மதுரை திருமங்கலம் சிறுமி, 'பதவி உயர்வுக்காக அதிகாரிகளுக்கு விருந்தாக்கப்பட்டரா? என ராமேஸ்வரத்தில் பிடிபட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளுக்கு தொடர்பா?: இதையடுத்து ராமநாதபுரம் போலீசார், சிறுமியிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர். பதவி உயர்விற்காக அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கப்பட்டாரா? அவர்களுடைய போட்டோவை சிறுமியிடம் காண்பித்தால், அடையாளம் சொல்ல முடியுமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடவடிக்கை: ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரி கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. குற்றவாளிகள் மதுரையில் பதுங்கியுள்ளனர். ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் இங்கே இல்லை. இந்த வழக்கு மதுரைக்கு மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட கும்பல்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இதன் அறிக்கை வந்த பிறகு சிறுமியிடம் விசாரணை செய்து, குற்றம் செய்தவர்களை கைது செய்வோம், என்றார். இது சம்பந்தமாக ராமேஸ்வரத்தை சேர்ந்த இரண்டு பேரை பிடித்த போலீசார் ராமநாதபுரம் கொண்டு வந்தனர். அவர்களை சிறுமியிடம் அடையாளம் காண்பித்து மேலும் பல தகவல்கள் சேகரிக்க உள்ளனர்.
தலைமறைவு: இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ராமேஸ்வரம் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ நேற்று மதியத்திற்கு மேல் விடுப்பில் சென்றார். இவர் உட்பட புரோகிதர் பாலகிருஷ்ணண், நகராட்சி தலைவர் ஜலீல் உடன் தொடர்புடைய உள்ள சிலர் நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் தலை மறைவாகினர். இதில் பாலகிருஷ்ணன், மொபைல்போனையும் வீட்டிலேயே வைத்து சென்றுள்ளார். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.