/உள்ளூர் செய்திகள்/தேனி/கரும்பு விவசாயம் பயனில்லாததால் பெரியகுளத்தில் மக்காச்சோளத்திற்கு மாற்றம்கரும்பு விவசாயம் பயனில்லாததால் பெரியகுளத்தில் மக்காச்சோளத்திற்கு மாற்றம்
கரும்பு விவசாயம் பயனில்லாததால் பெரியகுளத்தில் மக்காச்சோளத்திற்கு மாற்றம்
கரும்பு விவசாயம் பயனில்லாததால் பெரியகுளத்தில் மக்காச்சோளத்திற்கு மாற்றம்
கரும்பு விவசாயம் பயனில்லாததால் பெரியகுளத்தில் மக்காச்சோளத்திற்கு மாற்றம்
ADDED : ஜூலை 23, 2011 01:08 AM
பெரியகுளம் : பெரியகுளம் சுற்றுப்பகுதியை சேர்ந்த கரும்புவிவசாயிகள் மக்காச்சோளம் விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.
கரும்பின் விலை உயர்வதும், குறைவதும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இதனால் சராசரியாக 5 ஏக்கர் கரும்பு விவசாயம் செய்த விவசாயிகள் 3 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளனர். கரும்பு ஒரு ஆண்டு பயிராகும். ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. கரும்பு அறுவடையின் போது விலை இருந்தால் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபமும், விலை குறைந்தால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
இவர்களுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி கைகொடுத்துள்ளது. மக்காச்சோளம் 120 நாட்கள் பயிராகும், ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இருந்தபோதிலும் மக்காச்சோளம் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது.
கான்பிளாக்ஸ், ஓட்ஸ், பிஸ்கட், கோழிதீவனங்கள் உட்பட பலதரப்பட்ட பொருட்களுக்கு மக்காச்சோளம் மூலப்பொருட்களாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மக்காச்சோள வியாபாரிகள், அறுவடை காலத்தில் தோட்டத்திற்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்கின்றனர். தற்போது மக்காச்சோளம் குவிண்டல் 1150 ரூபாய் முதல் 1250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.