Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறை நகர் போக்குவத்து நெரிசல் சீர் செய்யப்படுமா?

பெருந்துறை நகர் போக்குவத்து நெரிசல் சீர் செய்யப்படுமா?

பெருந்துறை நகர் போக்குவத்து நெரிசல் சீர் செய்யப்படுமா?

பெருந்துறை நகர் போக்குவத்து நெரிசல் சீர் செய்யப்படுமா?

ADDED : ஆக 08, 2011 03:26 AM


Google News
பெருந்துறை: பெருந்துறையில், குன்னத்தூர் நால்ரோடு மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு சந்திப்புகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகவும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பெருந்துறை, குன்னத்தூர் நால்ரோட்டில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன் வழியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று, கோவை - பவானி மெயின் ரோடு சாலை வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும். குன்னத்தூர் நால் ரோட்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலையை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெருந்துறை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் குன்னத்தூர் நால்ரோடு அருகிலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 3 ஆயிரம் பேர் சாலையை அச்சமின்றி கடக்கலாம். விபத்துக்களும் தவிர்க்கப்படும். கோபி, குன்னத்தூர், பவானி, சேலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் நிறுத்தத்தின் வழியாக செல்லும் பொழுது, பெருந்துறையிலுள்ள டி.எஸ்.பி., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், நீதிமன்றங்கள், போலீஸ் ஸ்டேஷன், சார்நிலை கருவூலகம், சார் பதிவாளர் அலுவலகம், பெருந்துறை தாலுகா தலைமை அரசு மருத்துவமனை மற்றும் தீயணைப்பு நிலையம் போன்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம், தற்போது இருக்கின்ற சாலை வசதியை கொண்டே போக்குவரத்தை சீர் செய்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்காலம். கனரக வாகனங்கள் சுங்க வசூல் மையம் வழியாக செல்லாமல், பெருந்துறையில் இருந்து குன்னத்தூர், பெருமாநல்லூர் வழியாக திருப்பூர், கோவை, கேரளா மாநிலம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்புடன், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, கனரக வானங்கள் பைபாஸ் ரோட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என உத்தரவிட வேண்டும், ஈரோடு வடக்கு மாவட்ட, பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி துணைத் தலைவர் சரவணன், மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us