ADDED : ஆக 06, 2011 03:17 PM
புதுடில்லி: தணிக்கைக்குழு அறிக்கையையடுத்து, ஷீலா தீட்சித் ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் முறைகேடுகள் குறித்த தணிக்கைக்குழு அறிக்கையில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்., செய்தித்தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி, ஷீலா ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். ஊழல் விவகாரங்களில் அவரை, எடியூரப்பாவுடன் ஒப்பிடக்கூடாது என்றும் திவேதி கூறியுள்ளார்.