/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அனைவரும் பாராட்டும் பட்ஜெட் : என்.ஆர். காங்., பாலன் பெருமிதம்அனைவரும் பாராட்டும் பட்ஜெட் : என்.ஆர். காங்., பாலன் பெருமிதம்
அனைவரும் பாராட்டும் பட்ஜெட் : என்.ஆர். காங்., பாலன் பெருமிதம்
அனைவரும் பாராட்டும் பட்ஜெட் : என்.ஆர். காங்., பாலன் பெருமிதம்
அனைவரும் பாராட்டும் பட்ஜெட் : என்.ஆர். காங்., பாலன் பெருமிதம்
ADDED : ஆக 25, 2011 01:59 AM
புதுச்சேரி : 'அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் பட்ஜெட் சமர்பிக்கப்பட்டுள்ளது' என, என்.ஆர்.
காங்., பொதுச் செயலாளர் பாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.
மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச படிப்பிற்கான உச்சவரம்பு நீக்கப்பட்டு, மருத்துவப் படிப்பிற்கு மானியமாக 1 லட்சத்து75 ஆயிரம் ரூபாயும், பொறியியல் படிப்பிற்கு 25 ஆயிரம் ரூபாயும், இதர உயர் படிப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு வழி வகை செய்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை 250 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப்பை வழங்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை ரூபாய் ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயர்த்தியிருப்பதன் மூலம் சாலை, வடிகால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக நெல் அடிக்கும் களங்கள், கிடங்குகள், பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கப்படும் என அறிவித்து தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நெல் நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம் 50 சதவீத மானியத்தில் வழங்குவதற்கான அறிவிப்பு விவசாயிகளின் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. முதற்கட்டமாக, இலவச வாஷிங் மிஷின், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


