Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஊர்காவல்படை துணை மண்டல தளபதி பதவிக்கு 8ம் தேதிக்குள் விண்ணப்பம்

ஊர்காவல்படை துணை மண்டல தளபதி பதவிக்கு 8ம் தேதிக்குள் விண்ணப்பம்

ஊர்காவல்படை துணை மண்டல தளபதி பதவிக்கு 8ம் தேதிக்குள் விண்ணப்பம்

ஊர்காவல்படை துணை மண்டல தளபதி பதவிக்கு 8ம் தேதிக்குள் விண்ணப்பம்

ADDED : ஆக 01, 2011 02:09 AM


Google News
திருநெல்வேலி : நெல்லை மாவட்ட ஊர்காவல்படையில் துணை மண்டல தளபதி பதவிக்கான இடத்திற்கு விண்ணப்பங்களை வரும் 8ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட ஊர்காவல் படையில் உள்ள ஒரு துணை மண்டல தளபதி பதவிக்கான இடம் காலியாக உள்ளது. துணை மண்டல தளபதி பதவிக்குரிய நபர் தேர்வு செய்யப்படவுள்ளதால் தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய ஆண், பெண் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர எல்கைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். தேசிய மாணவர் படையில் (என்.சி.சி) பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள் அல்லது ஆசிரியர்கள் அல்லது உயர்பதவியிலும், தன்னார்வ தொண்டு பணியில் விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடையவர்களாக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

இது கவுரவப்பதவி என்பதால் ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மேற்படி நெல்லை மாவட்ட ஊர்காவல் படையில் துணை மண்டல தளபதி கவுரவப் பதவிக்காக நாட்டிற்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பான்மையுடையவர்கள் தங்களது விருப்ப விண்ணப்பங்களை சுய விபரக்குறிப்புடன் (பயோ டேட்டா) காவல் கண்காணிப்பாளர், நெல்லை மாவட்டம், திருநெல்வேலி-2 என்ற முகவரிக்கு வரும் 8ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us