ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : எஸ்ஸார் கோபி கூட்டாளி சரண்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : எஸ்ஸார் கோபி கூட்டாளி சரண்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு : எஸ்ஸார் கோபி கூட்டாளி சரண்
ADDED : ஆக 03, 2011 08:17 PM
மதுரை : மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் கூட்டாளி சீனிவாசன், 42, ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.
பாண்டியராஜன் கொலை வழக்கில், எஸ்ஸார் கோபி உட்பட 13 பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எஸ்ஸார் கோபி, அவனியாபுரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன், செந்தில்குமார், பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எஸ்ஸார் கோபி சகோதரர் ஈஸ்வரன், ராஜரத்தினம், காதர் நவாஸ் மதுரை கோர்ட்டிலும், மணிகண்டன், வீரபத்திரன் ஒட்டன்சத்திரம் கோர்ட்டிலும் சரணடைந்தனர்.
எஸ்ஸார் கோபி கூட்டாளி சீனிவாசன் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை, ஆக.,17 வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் டி.சுஜாதா உத்தரவிட்டார். எஸ்ஸார் கோபியின் சகோதரர் மருது உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.