Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மழை இல்லாததால் தரிசாகும் விளை நிலங்கள்எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் உர விலை

மழை இல்லாததால் தரிசாகும் விளை நிலங்கள்எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் உர விலை

மழை இல்லாததால் தரிசாகும் விளை நிலங்கள்எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் உர விலை

மழை இல்லாததால் தரிசாகும் விளை நிலங்கள்எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் உர விலை

ADDED : அக் 09, 2011 01:41 AM


Google News
திருநெல்வேலி:மழை இல்லாததால் விவசாய விளை நிலங்கள் தரிசாக மாறி வருகின்றனர். உர விலையும் அதிகமானதோடு கடும் தட்டுப்பாடும் நிலவுவதால் விவசாயிகள் பரிதாபத்துடன் காணப்படுகின்றனர்.தமிழகத்தில் பருவ மழை போதுமான அளவில் பெய்யாத காரணத்தினால் விவசாய விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாய் தரிசாகவே காணப்படுகின்றன. அணைகளில் நீர் இல்லாத காரணத்தினால் குடிநீருக்கு கூட மக்கள் திண்டாடி வருகின்றனர்.இதே நிலை நீடித்தால் அனைத்து பகுதிகளிலும் வரலாறு காணாத வகையில் வறட்சி ஏற்படும் சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை. இதில் குறிப்பாக, தென் மாவட்டப் பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாய விளை நிலங்கள் தரிசாகவே காணப்படுகிறது.ஆறுகள், குளங்கள், கிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. ஒருபுறம் தண்ணீர் இல்லாத சூழ்நிலை மற்றும் விவசாய இடுபொருட்களின் விலை ஏற்றம், விளைபொருட்களுக்கு ஏற்ற விலை இல்லாதது, போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை உட்பட பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக விவசாயிகள் பரிதாப நிலையில் புலம்பி வருகின்றனர்.

இதில் விவசாய இடுபொருட்களை பொறுத்தவரை உரங்கள் போதுமான அளவில் கிடைக்காத சூழ்நிலையில் விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ மூடை டி.ஏ.பி 486 ரூபாய்க்கு விற்றது. ஆனால் தற்போது இந்த விலை 909 ரூபாயை எட்டியுள்ளது. என்.பி.கே காம்பளக்ஸ் உரம் 327 ரூபாயில் இருந்து 737 ரூபாயாக உள்ளது.பொட்டாஷ் உரம் 231 ரூபாயில் இருந்து 565 ரூபாயாக உயர்ந்துள்ளதாக உர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கடுமையான விலை உயர்வு ஒருபுறமிருக்க, இந்த விலை கொடுக்க ஒரு சில விவசாயிகள் தயாராக இருந்தும் கடுமையான உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து உரம் இறக்குமதி செய்வதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் உரத் தட்டுப்பாடும், அதிக விலை ஏற்றமும் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் விலை அதிகம் ஒருபுறம், உரத்திற்கு போதுமான மானியம் அளிக்காத சூழ்நிலை போன்றவற்றினால் போதிய அளவில் உரங்களை இறக்குமதி செய்வதில் பிரச்னை நிலவுகிறது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் உரங்கள் ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்ளாத காரணத்தினால் பரவலாக அனைத்து பகுதிகளிலும் உரத் தட்டுப்பாடு நீடிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனைத்து பகுதிகளுக்கும் உரங்கள் கிடைக்கும் வகையில் கடைகளுக்கு உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். உரங்களுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர்.விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உர வகைகள் கிடைக்கவும், தொடர்ந்து விலை உயர்வை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே விவசாயிகள் வாழ்வில் வளம் பெறும். இல்லையெனில் வானம் பார்த்த பூமி போல்...விவசாயிகளின் வாழ்வும் தரிசு நிலமாகத்தான் காணப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us