/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தீவிரவாதம் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை:சி.ஆர்.பி.எப்., ஏ.டி.ஜி.பி., தகவல்தீவிரவாதம் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை:சி.ஆர்.பி.எப்., ஏ.டி.ஜி.பி., தகவல்
தீவிரவாதம் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை:சி.ஆர்.பி.எப்., ஏ.டி.ஜி.பி., தகவல்
தீவிரவாதம் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை:சி.ஆர்.பி.எப்., ஏ.டி.ஜி.பி., தகவல்
தீவிரவாதம் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை:சி.ஆர்.பி.எப்., ஏ.டி.ஜி.பி., தகவல்
ADDED : ஜூலை 25, 2011 09:37 PM
பெ.நா.பாளையம் : இந்தியாவில் தீவிரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சி.ஆர்.பி.எப்-ன் தென்பிராந்திய ஏ.டி.
ஜி.பி., ஸ்ரீகாந்த் பேசினார். குருடம்பாளையம் சி. ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லூரியில், கடந்த ஆறு மாதமாக 198 சப்- இன்ஸ்பெக்டர்கள் பணியிடை பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழாவில், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, சி.ஆர். பி.எப்., தென்பிராந்திய ஏ.டி.ஜி.பி., ஸ்ரீகாந்த் பேசியதாவது: தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டீஸ்கர், மேற்கு வங்க மாநிலங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் சில வீரர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க, வெளிநாட்டிலிருந்து அதிநவீன கருவிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதோடு, கடும் மழை, புயல், வெள்ளம், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்களை காப்பாற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, ஏ.டி.ஜி.பி., ஸ்ரீகாந்த் பேசினார்.
பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்களில் விக்ரம்சிங், ஹரிஷ் சந்திரா, ஜெய்சிங், சஞ்சய் யாதவ், சுப்ரமணியன், சந்தோஷ்குமார் ஆகியோருக்கு சிறந்த வீரர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், சி.ஆர்.பி.எப்., பயிற்சி கல்லூரி முதல்வர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியையொட்டி, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நடத்திய பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.