Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பஸ்சில் பயணியிடம் ரூ.18 ஆயிரம் அபேஸ்

பஸ்சில் பயணியிடம் ரூ.18 ஆயிரம் அபேஸ்

பஸ்சில் பயணியிடம் ரூ.18 ஆயிரம் அபேஸ்

பஸ்சில் பயணியிடம் ரூ.18 ஆயிரம் அபேஸ்

ADDED : ஜூலை 27, 2011 12:44 AM


Google News

திண்டிவனம் : பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 18 ஆயிரம் ரூபாய் திருடு போனது.

திண்டிவனம் ரோஷணையைச் சேர்ந்த சையத் பாபு மனைவி அசீமா,37. சையத் பாபு துபாயில் வேலை செய்து வருகிறார். அவர் வெளிநாட்டிலிருந்து மனைவிக்கு பணம் அனுப்பியிருந்தார். திண்டிவனம் தலைமை தபால் நிலையத்திற்கு சென்று நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அசீமா 18 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பஸ்சில் ஏறி வீட்டிற்கு சென்றார். திண்டிவனம் மார்க்கெட் கமிட்டி பஸ் நிறுத்த்தில் பஸ்சிலிருந்து இறங்கி பார்த்தபோது, பணத்தை காணவில்லை. இது குறித்து அசீமா கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us