டயர் வெடித்த விமானம் : 105 பேர் தப்பினர்
டயர் வெடித்த விமானம் : 105 பேர் தப்பினர்
டயர் வெடித்த விமானம் : 105 பேர் தப்பினர்
ADDED : செப் 06, 2011 11:47 PM
பானஜி: குவைத்தில் இருந்து கோவாவிற்கு, நேற்று வந்த ஏர்-இந்தியா விமானம், தரையிறங்கும் போது டயர்கள் வெடித்தன.
இருந்த போதிலும், 105 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். குவைத்தில் இருந்து கோவாவிற்கு நேற்று, 105 பயணிகளுடன் ஏர்-இந்தியா விமானம் வந்தது. கோவா விமான நிலையத்தில், காலை 8 மணிக்கு தரை இறங்க முயன்ற போது, விமானத்தின் டயர்கள் வெடித்தன. இருந்த போதிலும், விமானம் பாதுகாப்பாக டாக்சிவே பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து, ஏர்-இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விமானத்தின் டயர்கள் வெடித்தாலும், விமானத்தில் இருந்த 105 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த விமான பயணிகள், சென்னை செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்' என்றார். கடந்த வாரம், 104 பயணிகளுடன் மும்பை வந்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்க முயன்ற போது, ஓடு பாதையில் இருந்து விலகி சகதியில் சிக்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.