/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தக்காளிக்கு விலை இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் அவலம்தக்காளிக்கு விலை இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் அவலம்
தக்காளிக்கு விலை இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் அவலம்
தக்காளிக்கு விலை இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் அவலம்
தக்காளிக்கு விலை இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் அவலம்
ADDED : செப் 09, 2011 01:39 AM
ஆழ்வார்குறிச்சி :பொட்டல்புதூரில் தக்காளி பழத்திற்கு போதிய விலை
இல்லாததால் ரோட்டில் கொட்டும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
பொட்டல்புதூர் மார்க்கெட்டிற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள்
தங்கள் தோட்டங்களில் பயிரிட்டுள்ள நாட்டு தக்காளியை விற்பனைக்கு கொண்டு
வருவது வழக்கம். தற்போது தக்காளி விவசாயிகளிடம் இருந்து கிலோ 1 ரூபாய்க்கு
தான் வாங்கப்படுகிறது. வியாபாரிகள் கிலோ 2 ரூபாய்க்கு தான் தக்காளியை விற்க
வேண்டிய சூழ்நிலை உள்ளது. தக்காளிக்கு விலை இல்லாத சூழ்நிலையில் தக்காளி
வரத்து அதிகமாகியுள்ளது. விவசாயிகள் தக்காளி பழத்தை காசு கொடுத்து
பறிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வரத்து அதிகமாக இருப்பதால் விலை
கிடைக்காமல் தக்காளியை ரோட்டில் கொட்டக் கூடிய சூழ்நிலை விவசாயிகளுக்கு
ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொட்டல்புதூரில் கடை வைத்திருக்கும் வியாபாரி
கூறுகையில், ''தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் விலை இல்லை.
இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது'' என்றார்.


