ADDED : ஜூலை 14, 2011 09:44 PM
பல்லடம் : 'பல்லடம் ஒன்றியத்தில் உள்ள கரைப்புதூர் ஊராட்சியை மக்கள் தொகை
அடிப்படையில் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்; சாலை, குடிநீர்,
சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே இந்து மக்கள் கட்சியினர்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் பரமேஸ்வரன், செய்தி
தொடர்பாளர் ஜீயர் ரமணன், மாவட்ட பொது செயலாளர்பாண்டியராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.


