/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் கல்லூரியில் தமிழ் ஆய்வு மாநாடுகுற்றாலம் கல்லூரியில் தமிழ் ஆய்வு மாநாடு
குற்றாலம் கல்லூரியில் தமிழ் ஆய்வு மாநாடு
குற்றாலம் கல்லூரியில் தமிழ் ஆய்வு மாநாடு
குற்றாலம் கல்லூரியில் தமிழ் ஆய்வு மாநாடு
குற்றாலம் : குற்றாலம் பராசக்தி கல்லூரியில் அனைத்துலக பண்பாட்டு தமிழ் ஆய்வு மாநாடு நடந்தது.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மற்றும் திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகம் சார்பில் அனைத்துலக பண்பாட்டு தமிழ் 9வது ஆய்வு மாநாடு பராசக்தி கல்லூரியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு பராசக்தி கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகத்தை சேர்ந்த டாக்டர் மவுனகுருசாமி தரம்பிரான் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை முன்னாள் துறை தலைவர் தாயம்மாள் ஆய்வு கட்டுரை நூல்களை வெளியிட்டார். பேராசிரியர்கள் சுப்பிரமணியன், தெய்வநாயகம், அறிவரசன் முதல் பிரதிகளை பெற்றனர். மாநாட்டு குழு பொது செயலாளர் சரஸ்வதி ராமநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.நிகழ்ச்சியில் சிறப்பு கருத்தரங்கம், வில்லுப்பாட்டு சிறப்பரங்கம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஒருங்கிணைப்பாளர்களாக மாரியம்மாள், ஈசுவரி, டாக்டர் பார்வதி, திலகம், பாண்டிமாதேவி செயல்பட்டனர்.தஞ்சாவூர் ஐயா கல்வி கழக செயலாளர் குருநாதன் நன்றி கூறினார்.