Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் செண்பகாதேவியம்மன் கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்

குற்றாலம் செண்பகாதேவியம்மன் கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்

குற்றாலம் செண்பகாதேவியம்மன் கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்

குற்றாலம் செண்பகாதேவியம்மன் கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்

ADDED : ஆக 29, 2011 11:58 PM


Google News

குற்றாலம் : 'குற்றாலம் செண்பகாதேவியம்மன் கோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குவது குற்றால மலையாகும். தென்காசி வட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் ஒரு வரலாற்றுத்தலம், இயற்கையின் இருப்பிடம். தேனருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அருவிகள் சூழ்ந்த இடம். இத்தகைய வளமிக்க குற்றாலத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செண்பகாதேவியம்மன் கோயில் பெருமையை குற்றாலத்தல புராணம் சிறப்பாக பாடுகின்றது.



செண்பக(பூ)க் காடுகள் நிறைந்த இம்மலையின் காவல் தெய்வமாகவும், இவ்வட்டார பகுதி மக்களின் வழிபாட்டு தெய்வமாகவும் விளங்கும் செண்பகாதேவியம்மன் கோயிலில் விழாக்களும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றது. இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயில் மக்கள் வழிபாட்டுக்குரிய இடமாக இருப்பதால் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று தங்கி சமைத்து சாப்பிட்டு இறை வழிபாடு செய்து திரும்புவர்.



ஆனால் கடந்த ஆண்டு முதல் இப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் வனத்துறையினர் தடைவிதித்துள்ளதால் பக்தர்கள் உரிய வழிபாட்டு முறைகளை செய்ய முடியாமல் தெய்வ குற்றம் ஏற்படும் என கருதி வருகின்றனர். எனவே செண்பகாதேவியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று தரிசித்து வர விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கம் செய்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us